டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில், இன்று உச்சநீதிமன்றத்தில் மணிப்பூர் டிஜிபி ராஜிவ் சிங் ஆஜராகி விளக்கமளிக்கிறார். மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டுவர என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?, பாலியல் வன்முறைக்கு பெண்களை விட்டுச் சென்ற போலீசாரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை? உட்பட 6 கேள்விகளுக்கு டிஜிபி பதிலளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.