புதுடெல்லி: மணிப்பூரில் கடந்த மே 3ம் தேதி இருசமூகத்தினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் 100க்கும் அதிகமானோர் பலியாகினர். இந்த கலவரத்தின்போது பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு, பலாத்காரம் செய்யப்பட்ட விடியோ 2 மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் வௌியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது டிவிட்டர் பதிவில், “மணிப்பூர் கொடூரம், நிலவரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மணிப்பூர் பிரச்னை தொடர்பான விவாதத்தில் பங்கேற்க வேண்டும். காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களை பற்றி தவறான ஒப்பீடுகளை செய்யாமல் மணிப்பூர் முதல்வரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.