மணிப்பூர்: மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவத்தில் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. மணிப்பூர் வன்கொடுமை தொடர்பாக சிபிஐ விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்த நிலையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மணிப்பூர் பழங்குடியின பெண்கள் பாலியல் வன்முறை குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மணிப்பூர் சம்பவம் குறித்து பிரதமர் மோடி அவையில் விளக்கம் அளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முடக்கி வருகின்றனர். மணிப்பூர் விவகாரத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புலன் விசாரணைக்காக 7 பேர் போலீஸ் காவலில் உள்ளனர். பெண்கள் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்ட வீடியோ வெளியாகி ஒரு வாரம் ஆன நிலையில் சிபிஐ தற்போது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தவுள்ளது. சிபிஐ விரைவில் தனது விசாரணையை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.