டெல்லி : மணிப்பூர் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள், சாட்சியங்கள் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் காணொலி வழியே மட்டுமின்றி விருப்பப்பட்டால் நேரடியாகவும் வழக்கு விசாரணைக்கு ஆஜராகலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், நீதிமன்றத்தில் விசாரணைக்காக முறையாக இணையதள வசதியை ஏற்படுத்தவும் மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.