Wednesday, October 4, 2023
Home » 1800 மணிநேர மவுனதிற்கு பிறகு மணிப்பூர் கலவரம் பற்றி 30 வினாடிகள் பேசிய பிரதமர் மோடி : காங்கிரஸ் சாடல்

1800 மணிநேர மவுனதிற்கு பிறகு மணிப்பூர் கலவரம் பற்றி 30 வினாடிகள் பேசிய பிரதமர் மோடி : காங்கிரஸ் சாடல்

by Porselvi

டெல்லி : 1800 மணிநேர மவுனதிற்கு பிறகு மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் மோடி 30 வினாடிகள் பேசினார் என காங்கிரஸ் கடும் விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3ம் தேதி தொடங்கிய கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே இரண்டு பழங்குடியின இளம் பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக்கி நடுரோட்டில் ஊர்வலமாக இழுத்து செல்வது போன்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியின அமைப்பு அந்த பெண்களை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டியுள்ளது.

இந்த நிலையில், மணிப்பூர் சம்பவம் குறித்து நேற்று பிரதமர் மோடி தனது கருத்தை பதிவு செய்தார். மழைக்கால கூட்டத் தொடரில் பங்கேற்க நாடாளுமன்றத்திற்கு நேற்று காலை வந்த பிரதமர் மோடி, அங்கு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாண ஊர்வலம் நடத்திச் சென்ற வீடியோ குறித்து மிகுந்த வேதனை தெரிவித்தார். அவர் கூறுகையில், ‘‘ஜனநாயக கோயிலில் நிற்கும் இந்த சமயத்தில் என் இதயம் வலியாலும் கோபத்தாலும் நிறைந்துள்ளது. எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதி அளிக்கிறேன். மணிப்பூர் மகள்களுக்கு நடந்த கொடுமையை ஒருபோதும் மன்னிக்க முடியாது. இந்த சம்பவம் 140 கோடி இந்தியர்களையும் அவமானப்படுத்தி உள்ளது’’ என்றார்.

பிரதமரின் இந்த கருத்தை காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து உள்ளார். அவர் கூறியிருப்பதாவது, 1800 மணி நேர மவுனதிற்கு பிறகு மணிப்பூர் கலவரம் பற்றி பிரதமர் மோடி 30 வினாடிகள் பேசினார். மணிப்பூரில் அமைதி திரும்ப வேண்டும், அம்மாநில முதல்வர் பதவி விலக வேண்டும் என்றோ பிரதமர் கூறவில்லை காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் மணிப்பூர் சம்பவம் நடைபெற்று 17 நாட்கள் கழித்து தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது. 64 நாட்கள் கழித்து தான் முதல்வர் நடவடிக்கை குறித்து பேசுகிறார் தாமதமான நடவடிக்கை வெறும் வார்த்தைகள் இனி பலனளிக்காது செயல்களில் இருந்து வேகம் காட்ட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?