டெல்லி: மணிப்பூரில் அமைதி திரும்ப மக்களவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கோரிக்கையை ஏற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட இருதரப்பு மக்களிடையே பேசியுள்ளேன் எனவும் மணிப்பூரில் நிலைமை சீராகி வருவதால், யாரும் எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்ற வேண்டாம் எனவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டு கொண்டுள்ளார்.