மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது. வன்முறை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் சட்டம், ஒழுங்கு முற்றிலும் செயலிழந்து உள்ளதாக உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் மீது உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. மணிப்பூரில் முதல் தகவல் அறிக்கை எப்போது பதிவு செய்யப்பட்டது? மணிப்பூர் அரசு செயலிழந்த நிலையில் உள்ளதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மணிப்பூரில் வன்முறை நீடிக்கும் நிலையில் 2 மாதங்களாக அரசு அலட்சியமாக செயல்பட்டுள்ளது. விசாரணை எதுவும் முழுமையாக நடைபெற்றதாகத் தெரியவில்லை. முதல் தகவல்அறிக்கை பதிவு செய்ய அதிக தாமதம் ஏற்பட்டுள்ளது; கைது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.
மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமைகள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வன்முறை தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்க அனைத்து காவல்நிலையங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரு பெண்கள் கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்பட்டு, 37 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மணிப்பூர் அரசு தெரிவித்துள்ளது.
இரண்டு பழங்குடியினர் பெண்கள் சார்பாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அந்த மனுவும் தற்பொழுது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இதில் அரசு சார்பில் முக்கியமான தகவல் என்பது வழங்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக மணிப்பூர் வன்முறை தொடர்பாக இதுவரை 6,532 முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.