டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் முதலைக் கண்ணீர் வடிக்கின்றன என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தை வெறும் அரசியல் கண்ணோட்டத்துடன் எதிர்க்கட்சிகள் அணுகுவதாக நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்துள்ளார். நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தபோது எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளியேறின என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.