இம்பால்: மணிப்பூரில் மெய்டீஸ் -குக்கி சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் முதல் நடந்து வரும் மோதலில் 185 பேர் பலியாகி விட்டனர். கடந்த ஜூலை மாதம் மெய்டீஸ் இன மாணவியும் மாணவரும் மாயமாகினர். அவர்களுடைய சடலங்கள் கடந்த 25ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. உடல்களை மீட்டு தருமாறு மாணவர்களின் பெற்றோர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவத்தால் கடந்த வாரம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மணிப்பூரில் 2 மாணவர்கள் கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் தெரிவித்தார். ஆனால், இதில் 4 பேர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்.