டெல்லி: மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு சிறு விளக்கம் அளிக்கக் கூட பிரதமர் தயாராக இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மோடி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஆகஸ்ட் 8ல் விவாதம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் மோடியை பேச வைப்பதற்காக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 20ம் தேதி, இரு அவைகளிலும் தொடங்கியது. அவையில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
இதனால் நாடாளுமன்றம் இன்றுவரை முடங்கியுள்ளது. தற்போது மக்களவையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் எப்போது நடைபெறும்? என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 8-ந்தேதி இதன் மீதான விவாதம் நடைபெறும் எனவும், விவாதத்திற்கு பிறகு வரும் 10-ந்தேதி பிரதமர் மோடி விளக்கம் அளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது. பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
எதிர்க்கட்சிகள் வெளிநடப்புசெய்த நிலையில் மசோதாக்கள் மீதான விவாதம் மாநிலங்களவையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர் மணிப்பூர் விவகாரம் குறித்து ஒரு சிறு விளக்கம் அளிக்கக் பிரதமர் தயாராக இல்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க 11 நாட்களாக எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றனர். மணிப்பூர் கலவரத்தில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், 60,000-க்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியேறியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்தார்.