டெல்லி: மணிப்பூர் கலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசுவதை உறுதி செய்ய வேண்டும் என்று திமுக எம்.பி. தயாநிதிமாறன் தெரிவித்துள்ளார். உலகமே ஒரு குடும்பம் என்று பிரதமர் மோடி கூறுகிறார்; ஆனால் மணிப்பூர் பற்றி எரியும்போது அதைப் பற்றி பேச ஏன் மறுக்கிறார். தன் குடும்பத்தில் ஒரு பகுதியான மணிப்பூர் பற்றி எரியும் போது அதைப்பற்றி பிரதமர் ஏன் பேசாமல் இருக்கிறார். 25 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியை பிடிக்க முடியாத விரக்தியில்தான் பாஜக அரசு, அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் ஆளும் கட்சி வரிசையில் இருப்பார்கள் என்று அவர் கூறினார்.