டெல்லி: மணிப்பூர் கலவரம் தொடர்பாக பாஜக ஆதரவு குக்கி இன எம்எல்ஏக்கள் 10பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மணிப்பூரில் குக்கி மக்கள் வாழும் 5மாவட்டங்களில் தலைமை செயலாளர், டிஜிபி பதவியை உருவாக்கக் கோரி கடிதம் எழுதினர். மணிப்பூர் மறுசீரமைப்புபணி மேற்கொள்ள பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.500கோடி வழங்க கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.