கும்பகோணம்: வளையப்பேட்டை மாங்குடியில் காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணை 2வது நாளாக தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. காவிரி ஆற்றில் குளிக்கச் சென்ற அபிநயா, மீரா ஆகியோர் நீரில் அடித்துச் செல்லப்பட்டனர். நேற்று அபிநயா சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மீரா உடலை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் அடைந்துள்ளனர்.