சென்னை: மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் என பிரதமர் மோடி, ஒன்றிய வேளாண் அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் முதல்வரின் கடிதத்தில்;
“மாம்பழ விவசாயிகளின் துயரைப் போக்கிட, உற்பத்தியாகியுள்ள மாம்பழங்களை உரிய விலையில் மத்தியக் கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும்.
மாம்பழச் சாறு தயாரிக்கும் தனியார் நிறுவனங்கள் குறைந்தபட்சம் சேர்க்க வேண்டிய மாம்பழக் கூழ் அளவு உள்ளிட்ட FSSAI தரக்கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்திட வழிகாட்டுதல்கள் வழங்கிடவும்.
மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 12 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாகக் குறைத்திடவும்.
பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வுமுறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு வழங்கிட ஏதுவாகத் தமிழ்நாட்டில் PM-AASHA சந்தைத் தலையீட்டுத் திட்டத்தைச் (MIS) செயல்படுத்தவும் வலியுறுத்தி
பிரதமர் மோடி மற்றும் ஒன்றிய அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் ஆகியோருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்” என தெரிவித்துள்ளார்.