டெல்லி: மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினோம் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை தொடர்பான முதலமைச்சரின் கடிதம் ஒன்றிய அமைச்சரிடம் வழங்கப்பட்டது. மா விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.62 கோடி கேட்கப்பட்டுள்ளது. ஒன்றிய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் கடிதம் வழங்கப்பட்டது. ஒன்றிய அரசின் பங்காக ரூ.31 கோடி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார் என்று அமைச்சர் சக்கரபாணி கூறினார்.
மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்க ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தினோம்: அமைச்சர் சக்கரபாணி பேட்டி
0