தேவையானவை:
மாங்காய் பெரியது – 1,
வடக மாவு,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயத் தூள் – சிறிது.
மிளகு, சீரகப் பொடி – 2 ஸ்பூன்.
செய்முறை:
மாங்காயை துருவி அரைத்து, வடக மாவில் சேர்க்கவும். உப்பு, மிளகு, சீரகப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து கிளறவும். பிறகு, வடகங்களாக இட்டு வெயிலில் காயவைத்தால் சுவையான மாங்காய் வடகம் தயார். வடக சீஸனில் மாங்காய் சீஸனும் இணைவதால் இந்த வடகம் செய்து விடலாம்.