சென்னை: பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மாம்பழ விவசாயிகள் தாங்கள் விளைவித்த மாம்பழங்களை வாங்க ஆளில்லாததால் ஏரிகளில் மீன்களுக்கு உணவாகவும், சாலையோரங்களிலும் கொட்டுகின்றனர். எனவே, மாம்பழங்கள் கட்டுப்படியாகும் விலைக்கு கொள்முதல் செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக விவசாயிகள் மற்றும் மாம்பழக்கூழ் ஆலை அதிபர்களை அழைத்து முத்தரப்பு பேச்சுகளை தமிழக அரசு நடத்தி தீர்வு காண வேண்டும். ஏற்கனவே அறுவடை செய்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு குறைந்தது ரூ.30 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாம்பழம் கொள்முதல்; முத்தரப்பு பேச்சு: அன்புமணி வலியுறுத்தல்
0