சென்னை: மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும் என பிரதமர் மோடி, ஒன்றிய வேளாண் அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். மா விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்; மாம்பழ சாறு நிறுவனங்கள் FSSAI தரக்கட்டுபாடுகளை கடைப்பிடிக்க வழிகாட்டுதல் வழங்க வேண்டும். மாம்பழக் கூழுக்கான ஜி.எஸ்.டி.யை 12 -ல் இருந்து 5 விழுக்காடாகக் குறைக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மா விவசாயிகளுக்கு 50:50 பகிர்வு முறையில் மாநில அரசும் ஒன்றிய அரசும் இழப்பீடு தர வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாம்பழங்களை உரிய விலையில் மத்திய கொள்முதல் முகமைகள் கொள்முதல் செய்திட உத்தரவிடவும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
0