மாங்கொட்டைகள் – 3 (உப்பில் ஊற வைத்து,காய வைத்தது)
புளி – ஒரு எலுமிச்சை அளவு
மல்லி விதை – 4 டீஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 6 டீஸ்பூன்
எண்ணெய் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெல்லம் – சிறியது
மிளகாய் வற்றல் – 10
தாளிப்பதற்கு :
கடுகு – 1/2 டீஸ்பூன்
எண்ணெய் – 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் வெந்நீரில் மாங்கொட்டைகளை பத்து நிமிடம் ஊற வைக்கவும். புளியைக் கரைத்து வடிகட்டவும். ஒரு வாணலியில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், மல்லிவிதை இரண்டையும் வறுத்து, வறுபட்டதும் மிளகு, சீரகத்தைச் சேர்த்துக் கிளறி உடனே அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும். கடையில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை போட்டு, கரைத்த புளி, உப்பு, வெல்லம், அரைத்த மசாலா எல்லாம் சேர்த்துக் கொதிக்க வைத்து, கொதி வந்ததும் மாங்கொட்டைகளைப் போட்டு நன்றாகக் கொதித்து கெட்டியானதும் இறக்கவும்.