தேவையானவை:
கெட்டி மாங்காய் – 1,
புளி – நெல்லிக்காய் அளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய் – 3,
வெல்லப் பொடி – 1 ஸ்பூன்,
வறுத்த வெந்தயம், எள், உளுத்தம் பருப்பு பொடி – 2 ஸ்பூன்.
செய்முறை:
மாங்காயை துண்டுகளாக நறுக்கவும். வாணலியில் நல்லெண்ணெய் 2 ஸ்பூன் விட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து காய்ந்த மிளகாயை கிள்ளி போடவும். மாங்காய் துண்டுகளை போட்டு வதக்கி, புளியை கரைத்து ஊற்றவும். உப்பு, வெல்லப் பொடி சேர்க்கவும். மாங்காய் வெந்ததும் வறுத்த வெந்தயம், எள், உளுத்தம் பருப்புப் பொடியைச் சேர்க்கவும். கொதித்ததும் இறக்கினால் மாங்காய் குழம்பு தயார். சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளவும் சுவையாக இருக்கும்.