தேவையானவை:
மாங்காய் சிறியது – 1,
மோர் – 3 கப்,
உப்பு, எண்ணெய் – தேவைக்கு.
அரைக்க:
இஞ்சி – 1 துண்டு,
சீரகம் – 2 ஸ்பூன்,
கடலைப்பருப்பு – 1 ஸ்பூன்,
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்.
செய்முறை:
கடலைப்பருப்பு, சீரகம், இஞ்சி, தேங்காய் துருவல், துருவிய மாங்காய் இவற்றை வெந்நீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மோரில் இந்தக் கலவையை அரைத்து மீதமுள்ள மோரில் கரைத்து சூடாக்கவும். லேசாக பொங்கியதும் இறக்கி உப்பு சேர்க்கவும். மாங்காயை துண்டுகளாக்கி, வேகவைத்தும் மோரில் சேர்க்கலாம். தேங்காய் எண்ணெயில் கடுகு தாளித்து கலக்கவும்.