தேவையானவை:
தயிர் – 1 கப்,
மாம்பழத் துண்டுகள் – 1 கப்,
புதினா இலைகள் – 1 பிடி,
சர்க்கரை – தேவையான அளவு.
செய்முறை:
புதினாவை தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும். மிக்ஸி ஜூஸரில் மாம்பழத்துடன் சர்க்கரை சேர்த்து அடித்து, தயிரும் சேர்த்து அடித்து, கடைசியில் புதினா, தண்ணீர் சேர்த்து அடித்தால் மேங்கோ மோர் தயார். ஐஸ் துண்டுகள் சேர்த்து பரிமாறலாம்.