Monday, March 4, 2024
Home » மண்டபம் பகுதியில் மீன்பிடி வலை பின்னும் கூடம் அமைக்க வேண்டும்

மண்டபம் பகுதியில் மீன்பிடி வலை பின்னும் கூடம் அமைக்க வேண்டும்

by Lakshmipathi

*மீனவர்கள் வலியுறுத்தல்

மண்டபம் : மண்டபம் காந்தி நகர் தென் கடலோரப் பகுதியில் மீனவர்கள் பயன்படும் வகையில் மீன்பிடி வலைகள் பின்னும் கூடம் அமைக்க அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டபம் பேரூராட்சிக்கு உட்பட்டது காந்திநகர் பகுதியாகும். இந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் மீனவர்கள் தென் கடலோரப் பகுதியிலிருந்து நாட்டுப் படகில் மன்னார் வளைகுடா கடல் பகுதிக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது மீன்பிடி வலைகள் பாறைகளில் சிக்கி சேதமடைந்து விடும். இந்த சேதமடைந்த வலைகளை மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்து சீரமைத்து மீண்டும் மீன் பிடிக்க கொண்டு செல்வார்கள்.இந்நிலையில் காந்தி நகர் தென்கடலோரப் பகுதியில் மீன்பிடி வலை பின்னும் கூடம் இல்லை. இதனால் மீனவர்கள் வெயிலிலும் மழையிலும் பாராமல் கடல்கரை மணலில் அமர்ந்து மீன்பிடி வலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இந்நிலையில் மீன் பிடிக்க சென்று நேற்று கரை திரும்பிய மீனவர்கள் சேதம் அடைந்த மீன்பிடி வலைகளை கடல் கரையோரப் பகுதியில் வெட்ட வெயிலில் மணலில் அமர்ந்து சீரமை பணியில் ஈடுபட்டனர்.

இந்த மீனவர்கள் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வேற வழியின்றி வாழ்வாதாரத்துக்காக சேதமடைந்த மீன்பிடி வலைகளை சீரமைப்பு பணிகளில் ஈடுபட வேண்டி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியில் மீன்பிடி வலை பின்னும் கூடம் அமைக்கும் பட்சத்தில் மீனவர்கள் பிடித்து வரும் மீன்களை வியாபாரிகளுக்கு விற்பனை கூடமாகவும் பயன்படுத்த வசதியாக இருக்கும்.

மேலும் இந்த பகுதிக்கு அருகே ராமேஸ்வரம்-ராமநாதபுரம் தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் மீன்களை வியாபாரிகள் வாகனத்தில் ஏற்றி செல்வதற்கு இலகுவாக இருக்கும். இதனால் காந்தி நகர் தென் கடலோரப் பகுதியில் சுங்கத்துறை அலுவலகம் அருகாமையில் மீனவர்கள் நலன் கறுதி மீனவர்கள் பயன்படும் வகையில் மீன்பிடி வலைகள் பின்னும் கூடம் அமைக்க மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

nineteen − 14 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi