கரூர், நவ. 9: மணவாடி ஊராட்சி கல்லுமடையில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணியர் நிழற்குடை அமைக்க நடந்த பூமிபூஜையில் ஜோதிமணி எம்பி பங்கேற்றார்.தாந்தோணி ஒன்றியம் மணவாடி ஊராட்சி கல்லுமடை கரூர் திண்டுக்கல் சாலையில் நீண்டநாட்களாக பயணிகள் நிழற்குடை இல்லை. இதுதொடர்பாக ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி கந்தசாமி, ஜோதிமணி எம்.பியிடம் கோரிக்கைவைத்திருந்தார். இதன் அடிப்படையில் ரூ.8 லட்சம் மதிப்பில் நிழற்குடை அமைப்பதற்கான பூமி பூஜை கல்லுமடை பிரிவில் நடந்தது.ஊராட்சி மன்ற தலைவர் ஏபி கந்தசாமி தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஜோதிமணி எம்பி கலந்து கொண்டார். புதிய நிழற்குடைக்கு அமைக்கும பணி 3 மாதங்களில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்படும் என்றார்.