திருவொற்றியூர்: எண்ணூர், காமராஜர் நகரில் ஓம் நவசக்தி விநாயகர் ஆலயம் உள்ளது. நேற்று காலை, வழக்கம் போல் கோயிலை திறக்க வந்தபோது, நுழைவாயிலில் இருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் கொள்ளை போயிருந்தது. இதுகுறித்து கிராம நிர்வாகி திருசங்கு, எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்தனர். அதில், அதே பகுதியை சேர்ந்த பிரதாப் (21) என்பது தெரிந்தது. அவரை கைது செய்தனர். இவர், மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.