நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அ டுத்த தர்ம கிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவரது நண்பர்கள் அருன் தாமஸ் ஆண்ட்ரூ தாமஸ். இருவரும் கேரள மாநிலம் இடுக்கி மற்றும் மஞ்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் . இவர்கள் புதிதாக கார் வாங்கிய நிலையில் கூடலூரில் உள்ள நண்பர் ராஜேஷ் பார்க்க வந்துள்ளனர். கூடலூர் வந்த இவர்கள் நண்பர் ராஜேசைஅழைத்துக்கொண்டு ஓவேலி பகுதிக்கு சென்றுள்ளனர்.
பின்னர் இரவு சுமார் 11 மணியளவில் அங்கிருந்து தர்மகிரிக்கு குறுக்கு வழியில் வந்துள்ளனர். இந்தப் பகுதி வழியாக ஓடும் பாண்டியாற்றின் கிளை ஆற்றில் வழக்கமாக வாகனங்கள் சென்று வரும் பாதையில் காரை ஓட்டி வந்துள்ளனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் காரில் சிக்கிய மூவரும் அருகில் உள்ள உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதனை அடுத்து கூடலூர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காரில் இருந்தவர்கள் கண்ணாடி வழியாக காரின் மேல் ஏறி நின்ற நிலையில், தீயணைப்பு வீரர்கள் காரில் கயிறு கட்டி மூன்று பேரையும் மீட்டனர்.