கொல்கத்தா :பாலியல் வன்கொடுமைகள் மனித குலத்திற்கு எதிரானவை; -சமூக சீர்திருத்தங்கள் தேவை என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கும் மசோதா குறித்து பேசிய மம்தா,”புதிய மசோதா மூலம் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க முயற்சித்துள்ளோம். உத்தரபிரதேசம், குஜராத்தில்தான் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் நிகழ்கின்றன,”என்றார்.