திருத்தணி: பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய அக்காள் கணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணியான பள்ளி மாணவியை அவரது குடும்பத்தினர் பிரசவத்திற்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிகிச்சையின் போது சிறுமியின் ஆதார் கார்டை மருத்துவர்கள் சோதித்ததில் சிறுமிக்கு 17 வயது என குறிப்பிட்டிருந்தது. இதனையடுத்து சிறுமி கர்ப்பம் தொடர்பாக மருத்துவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில் எரும்பி பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பெருமாள்(25) பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவை திருமணம் செய்துவிட்டு பிளஸ்டூ படித்து வரும் அவரது தங்கையான 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கியது தெரியவந்தது. இதனைதொடர்ந்து போலீசார் பெருமாள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவியை கர்ப்பமாக்கிய மாமன் போக்சோவில் கைது
0