மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் பழங்கால கார்கள் கண்காட்சி நடைப்பெற்றது. சென்னையில் உள்ள தனியார் அசோசியேசன் சார்பில், பழங்கால கார்களின் அணிவகுப்பு பயணம் சென்னையில் இருந்து புதுச்சேரி வரை நடந்தது. பிறகு புதுச்சேரியில் இருந்து மாமல்லபுரம் வந்த 30க்கும் மேற்பட்ட பழங்கால கார்கள் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நிறுத்தி காட்சிபடுத்தப்பட்டன. சுற்றுலா பயணிகள் பலர் பழங்கல கார்களை ரசித்து பார்த்து செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். அனைத்து, கார்களும் புத்தம் புதிய வடிவில் வண்ணம் தீட்டப்பட்டு அழகுற காட்சி அளித்தன.