செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் கடலில் குளித்த போது அலையில் சிக்கி காணாமல் போன 2 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்ணா நகர் பகுதியை சேர்ந்த கிரீஷ் (20), ரியாஸ் (18) தங்களது நண்பர்களுடன் மாமல்லபுரம் சுற்றுலா சென்றுள்ளனர். கடலில் மூழ்கி காணாமல் போன 2 இளைஞர்களை தேடும் பணியில் போலீசார், தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடல் சீற்றமாக இருந்ததை அறியாமல் கடலில் குளித்தபோது 2 இளைஞர்களும் அலையில் சிக்கி மூழ்கினர். கடல் அலையில் இழுத்து செல்லப்பட்ட இருவரையும் மீனவர்கள் உதவியுடன் படகில் சென்று தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாமல்லபுரம் கடலில் குளித்த 2 இளைஞர்கள் மாயம்
0
previous post