டெல்லி : பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுவிட்டு நாடு திரும்பிய மல்யுத்த வீராங்களை வினேஷ் போகத்துக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. டெல்லி விமான நிலையத்தில் மல்யுத்த வீராங்கனைக்கு மேள தாளங்களுடன் சக வீரர்கள் கண்ணிர் மல்க வரவேற்பு அளித்தனர். இறுதிச் சுற்றில் கூடுதலாக 100 கிராம் எடை உள்ளதாகக் கூறி வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.