டெல்லி: மணிப்பூர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட ஜனாதிபதியிடம் கோரிக்கை: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த பின் I.N.D.I.A கூட்டணி எம்.பி.க்கள் பேட்டி அளித்துள்ளனர். மணிப்பூர் பிரச்சனை தொடர்பாக குடியரசு தலைவரிடம் I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் மனு அளித்துள்ளனர். மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி சபையில் பேசுவதற்கு தயங்குவது ஏன்? என மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.