பொன்னேரி: மீஞ்சூர் அடுத்த நாலூர் ஏரியில் துர்நாற்றம் வீசுவதாக ேநற்றுமுன்தினம் மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் மிதந்து கொண்டிருந்த ஆண் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாலூர் ஏரிக்கரை பகுதியில் சாலை பணிக்கான பள்ளம் தோண்டப் பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. அங்கு பணிபுரிந்த ஒருவர் தான் இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.