புதுடெல்லி: இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சந்தித்துப் பேசினார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வந்தார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி – அன்வர் இப்ராஹிம் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு உள்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் புதிய வாய்ப்புகள் குறித்து இரு தலைவர்களும் விரிவாக ஆலோசித்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, இன்று மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார். இரு நாடுகளில் உள்ள பிரச்னைகள், உலகளாவிய பிரச்னைகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.