கோலாலம்பூர்: மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் அபார வெற்றி பெற்றார். மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் போட்டிகள் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் நடந்து வருகின்றன. நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் ஜப்பான் வீரர் யுஷி தனாகாவுடன், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் மோதினார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய ஸ்ரீகாந்த், 21-18, 24-22 என்ற நேர் செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சீன வீரர் லி ஷிபெங் உடன் ஸ்ரீகாந்த் மோதவுள்ளனர்.
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: ஸ்ரீகாந்த் அசத்தல் இறுதிக்கு தகுதி
0