மதுராந்தகம்: உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் சாலவாக்கம் அடுத்த மலையாங்குளம் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தலைமை தாங்கினார். திமுக ஒன்றிய செயலாளர் குமார் முன்னிலை விகித்தார். ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி முரளி அனைவரையும் வரவேற்றார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு பயனாளிகளுக்கு பட்டா நகல் மற்றும் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் அடையாள அட்டை ஆகியவற்றை உடனுக்குடன் பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து, சுகாதாரத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆகிய துறை சார்ந்த அதிகாரிகளிடம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களுக்கான மனுக்களை வழங்கினர். இதனைத்தொடர்ந்து, வயலக்காவூர் ஊராட்சியில் அரசு திறந்தவெளி நெல் கொள்முதல் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளில், அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட கவுன்சிலர் சிவராமன், கவுன்சிலர்கள் கல்யாணசுந்தரம், அன்புராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் பூங்கொடி சேட், பொன்மொழி சுதா, சுபாஷ், திமுக நிர்வாகிகள் ஞானவேல், திருநாவுக்கரசு, மாரி துரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. முகாமில் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஹேமலதாஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன், வட்டாட்சியர் தேன்மொழி, மாவட்ட குழு உறுப்பினர் பத்மாபாபு, பேரூராட்சி மன்ற தலைவர் பொன்.சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் மங்களகவுரிவடிவேலு அனைவரையும் வரவேற்றார்.
இதில் காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு, 23 பயனாளிகளுக்கு தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் கட்டுவதற்கான பணி ஆணையும், 11 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.4 லட்சத்து 15 ஆயிரம் கடன் உதவியும், குடும்ப அட்டைகள் மற்றும் கலைஞரின் மருத்துவ காப்பீடு அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இந்நிகழ்வில், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.