சென்னை: மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் குறித்து மின்னஞ்சல் மூலம் புகார்கள் வந்துள்ளன என்று டிஐஜி அஜிதா பேகம் கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் பாலியல் அத்துமீறல் பற்றி புகார் கூறியவர்களையும் தொடர்புகொண்டு விசாரித்து வருகிறோம். சமூக வலைதளங்களில் புகார் கூறுபவர்கள், எழுத்துப்பூர்வமாக மனு அளித்தால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்கள் தயக்கமின்றி புகார் தந்தால் மட்டுமே தவறு செய்தோர் மீது குற்ற நடவடிக்கை எடுக்க முடியும்.