திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகை ஒருவர் கடந்த 2017ல் திருச்சூரிலிருந்து கொச்சிக்கு இரவில் காரில் செல்லும்போது ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவரது முன்னாள் டிரைவரான பல்சர் சுனில்குமார் என்பவர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பிரபல மலையாள முன்னணி நடிகர் திலீப் சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு எர்ணாகுளத்திலுள்ள தனி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பெண் நீதிபதியான ஹனி வர்கீஸ் இந்த வழக்கை விசாரித்து வருகிறார். கடந்த ஜூலை 31ம் தேதிக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. விசாரணையை முடிப்பதற்கு மேலும் 8 மாதம் கால அவகாசம் கேட்டு நீதிபதி ஹனி வர்கீஸ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்று உச் ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.