கேரளா: பாலியல் குற்றச்சாட்டில் மலையாள திரைப்பட நடிகர் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கேரள நடிகைக்கு வெளிநாட்டில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகர் நிவின் பாலி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. படவாய்ப்பு தருவதாகக் கூறி பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். நடிகர் நிவின் பாலி மீதான வழக்கு சிறப்பு புலனாய்வுக் குழுவிற்கு மாற்றம் செய்யப்படுகிறது.