கேரளா: ரூ.5.75 கோடி கேட்டு பிரபல மலையாள நடிகை மஞ்சு வாரியருக்கு நடிகை சீத்தல் தம்பி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மஞ்சு வாரியரின் மூவி பக்கெட் நிறுவனம் தயாரித்த ஃபுட்டேஜ் என்ற படத்தில் நடித்தபோது காயம் ஏற்பட்டதாக சீத்தல் புகார் அளித்துள்ளார். போதிய பாதுகாப்பின்றி படப்பிடிப்பை காட்டுக்குள் நடத்தியதாகவும், அபாயகரமான காட்சியை படம்பிடித்தபோது காயமடைந்த தன்னை கொண்டுசெல்ல ஆம்புலன்ஸ் கூட ஏற்பாடு செய்யவில்லை என வக்கீல் நோட்டீசில் சீத்தல் தம்பி புகார் அளித்துள்ளார். படத்தில் நடிப்பதற்காக தனக்கு ரூ.1.8 லட்சம் மட்டுமே ஊதியம் கொடுத்ததாகவும், சிகிச்சை பெற தனக்கு பல லட்சம் ரூபாய் செலவானதால் ரூ.5.75 கோடி வழங்க வேண்டும் என்று சீத்தல் தம்பி வலியுறுத்தியுள்ளார்.