திருவனந்தபுரம்: 1980, 90 காலகட்டத்தில் மலையாள சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர் பாலச்சந்திர மேனன். கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என சினிமாவில் அனைத்து துறைகளிலும் இவர் முத்திரை பதித்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள மீனு முனீர் என்ற நடிகை இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பலாத்கார புகார் கொடுத்தார்.
பாலச்சந்திரமேனன் இயக்கி நடித்த, ‘தே இங்கோட்டு நோக்கியே’ என்ற படத்தில் தன்னை நடிக்க அழைத்ததாகவும், படப்பிடிப்பு நாட்களில் ஓட்டலுக்கு வரவழைத்து தன்னை பலாத்காரம் செய்ததாகவும் அவர் தன்னுடைய புகாரில் குறிப்பிட்டிருந்தார்.சமூக வலைதளங்களிலும் பாலச்சந்திர மேனனுக்கு எதிராக அவதூறு கருத்துக்களை இவர் பகிர்ந்தார்.
ஆனால் நடிகை மீனு முனீரும், அவரது வக்கீலும் சேர்ந்து தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சிப்பதாக கூறி பாலச்சந்திர மேனன் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். இதையடுத்து நடிகை மீனு முனீர் முன்ஜாமீன் கோரி கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நடிகை மீனு முனீரை கொச்சி போலீசார் கைது செய்து ஜாமீனில் விடுவித்தனர்.