இரண்ேடா அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இணைவு, தொடர்பு, பார்வை ஆகியவை யோகம் எனச் சொல்லப்படுகிறது. இந்த யோகத்தினை, பல வகைகளாகவும், வடிவங்களாகவும் பிரித்து அதற்குள் மற்றொரு இணைவை அறிந்தும் பலன் சொல்லலாம். சுக போகங்களுக்கு அதிபதியாக இருப் பவர் சுக்கிரன். இந்த சுக்கிரனே அசுர குருவின் தலைவனான சுக்கிராச்சாரியார் ஆவார். இவர் தரும் யோகம் ஈர்ப்பானது மாயமானது. இவர் தரும் கேந்திர ஸ்தானங்களில் அமர்ந்து தரும் மாளவ்யா யோகத்தைப்பற்றி அறிவோம்.
மாளவ்யா யோகம் என்றால் என்ன?
அடிப்படையில் சுக்கிரனை மையமாக வைத்து ஏற்படும் யோகம். சுக்கிரன் கேந்திர ஸ்தானங்கள் என சொல்லக் கூடிய ஒன்றாம் இடம் (1ம்), நான்காம் இடம் (4ம்), ஏழாம் இடம் (7ம்), பத்தாம் இடம் (10ம்) ஆகியவற்றில் அமர்ந்து தரக்கூடிய பலன்கள் மிகவும் ஆடம்பரமாகவும், அழகாகவும் இருக்கும். பார்ப்பவர்களுக்கு மிகவும் பிரமிப்பு ஏற்படும் வகையில் அமையக்கூடிய யோகம் ஆகும். பொதுவாகவே, எந்த கிரகமும் கேந்திர ஸ்தானங்களில் அமைகின்ற கிரகங்கள் வலிமையானதாக இருக்கும். ஆனால், இந்த கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்று அமையும்பொழுது இன்னும் சிறந்த பலனை தரக்கூடியது. மேலும், சுக்கிரதிசை அல்லது சுக்கிர புத்தி ஏற்படும் பொழுது இன்னும் சிறப்பான பலன்களை தரும்.
மாளவ்யா யோகம்
குறைபடும் அமைப்புகள்
* மேஷ லக்னத்திற்கு ஏழாம் பாவகமாக (7ம்) வரும் சுக்கிரன் ஏழாம் பாவத்தில் அமர்ந்திருந்தால், கேந்திர ஆதிபத்ய தோஷம் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. சிலருக்கு இந்த யோகம் இருந்தாலும், தாங்கள் மிகவும் சிரமம் அடைவது போன்ற எண்ணத்துடன் இருப்பர் அல்லது இந்த யோகம் தடைப்படக் கூடியதாக இருக்கும்.
*சுக்கிரன், ராகுவின் பிடியிலோஅல்லது பார்வையிலோ இருக்கக்கூடாது.
* சுக்கிரன், சூரியனுக்கு நெருங்கிஇருத்தல் கூடாது. அப்பொழுது சுக்கிரன் அஸ்தங்கம் தோஷம் அடைவார்.
* சுக்கிரன், ராகுவின் நட்சத்திரத்திலோ, கேதுவின் நட்சத்திரத்திலோ அல்லது வியாழனின் நட்சத்திரத்திலோ இருக்கக்கூடாது.
* சுக்கிரனை வியாழன் பார்வை செய்தல் கூடாது.
மாளவ்ய யோகத்தின்
பொதுவான பலன்கள்
* இவர்களுக்கு அழகான நல்ல வீடு, வாகனம் உண்டாகும் அமைப்புகள் உண்டு.
* மேடை ஏறி பாடும் அல்லது சொற்பொழிவுகள் நிகழ்த்தும் அமைப்புகள் உண்டு.
* சிலருக்கு தனித்திறமையினால் தொழில் செய்யக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும்.
* ஜவுளி வியாபாரம், வைர வியாபாரம் செய்யக்கூடிய பாக்கியங்களை ஏற்படுத்தும்.
* வாகனங்களை வைத்து செய்யக்கூடிய தொழில் சிலருக்கு ஏற்படும்.
* வீட்டில் கவர்ச்சிகரமான பொருட்கள் சேர வாய்ப்புகள் உண்டு.
* ஆணாக இருந்தால் அழகான மனைவி / பெண்ணாக இருந்தால் அழகான கணவன் அமையும் அமைப்புகளை ஏற்படுத்தும்.
* சிலருக்கு பியூட்டி பார்லர் போன்ற தொழில் செய்யும் அமைப்புகளை ஏற்படுத்தும்.
* ஆடம்பரமான பொருளாதாரச்செலவுகளும், வரவுகளும் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கும்.
* சினிமா, போட்டோகிராபி, மார்க்கெட்டிங் போன்ற தொழில்களில் ஈடுபடும் வாய்ப்புகள் உண்டு.
லக்னம் மற்றும் ராசியை
அடிப்படையாகக்கொண்ட மாளவ்யா யோகம்
* மேஷ லக்னத்திற்கு, ஏழாம் (7ம்) பாவத்தில் கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தி நன்மையும் தீமையும் கலந்த பலன்கள்.
* ரிஷப லக்னத்திற்கு, லக்னத்தில் (1ம்) பாவத்தில் அமர்ந்து மாளவ்யா யோகத்ைத ஏற்படுத்துவார்.
* மிதுன லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் அமர்ந்து (10) நன்மைகளை வாரி வழங்கும் மாளவ்யா யோகம்.
* கடக லக்னத்திற்கு நான்காம் வீட்டில் (4ம்) அமர்ந்து கேந்திராதிபத்திய தோஷத்தால் நற்பலன்களும்
தீய பலன்களும் கலந்து ஏற்படும்.
* சிம்ம லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் அமர்ந்து (10) நன்மைகளை வாரி வழங்கும் மாளவ்யா யோகம்.
*கன்னி லக்னத்திற்கு ஏழாம் (7ம்) பாவத்தில் அமர்ந்து சமூகத்தில் பெரும் மதிப்பையும் பொருளாதாரத்தில் மேன்மையையும் மாளவ்யா யோகம் ஏற்படுத்தும்.
* துலாம் லக்னத்திற்கு லக்னத்தில் (1ம்) பாவத்தில் அமர்ந்து மாளவ்யா யோகத்ைத பெறுவர்.
* விருச்சிக லக்னத்திற்கு ஏழாம் (7ம்) பாவத்தில் கேந்திராதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தி நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் ஏற்படும்.
*தனுசு லக்னத்திற்கு நான்காம்வீட்டில் (4ம்) அமர்ந்து நற்பலன்கள் ஏற்படும்.
* மகர லக்னத்திற்கு பத்தாம் பாவத்தில் அமர்ந்து (10) நன்மைகளை வாரி வழங்கும் மாளவ்யா யோகம்.
* கும்ப லக்னத்திற்கு (4ம்) அமர்ந்து கேந்திராதிபத்திய தோஷத்தால்நற்பலன்களும் தீய பலன்களும் கலந்து ஏற்படும்.
* மீன லக்னத்திற்கு லக்னத்தில் (1ம்) பாவத்தில் அமர்ந்து மாளவ்யா யோகத்ைத பெறுவர்.
பரிகாரம் என்ன செய்யலாம்?
* வெள்ளிக்கிழமை தோறும் சுக்ர ஹோரையில் அம்பாளையோ அல்லது மகாலெட்சுமிக்கு பூஜை செய்து நற்பலன்களைத் தரும்.
* பௌர்ணமியில் வரும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டில் சுமங்கலி பூஜை செய்வது நற்பலன்களை வாரி வழங்கும் அமைப்பை தரும்.
* வெள்ளிக்கிழமை குபேரபூஜை செய்வதும். நன்மை பயக்கும்.
* வெள்ளை மொச்சை அம்பாளுக்கு நெய்வேத்தியம் செய்து தானமாக வழங்குதல் நற்பயன்களை உண்டாக்கும்.
ஜோதிட ஆய்வாளர் சிவகணேசன்