சென்னை: பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளை மேற்கோள் காட்டி, மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: பெண்களால் முன்னேறக் கூடும்-நம், வண்தமிழ் நாடும் எந்நாடும், மேஜர் ஜெனரல் இக்னேசியஸ் டெலாஸ் புளோராவின் மகத்தான சாதனைக்குப் பாராட்டுகள்.
தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண் மேஜர் ஜெனரலாக அவர் உயர்ந்திருப்பது சிறப்பான மைல்கல்லாகும். அவரது அபாரமான பணிக்கும், சேவைக்கும், ஆர்வத்துக்கும் எனது வணக்கங்கள். இவ்வாறு டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.