சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தொடர் அழுத்தம் அளித்து வந்த நிலையில், தமிழகம் முழுவதும் மக்காச்சோளத்திற்கு 1 சதவீதம் சந்தை கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்தி, மக்காச்சோளம் விளையும் மாவட்டங்களான ஈரோடு, திருப்பூர், கோவை, நாகை, தஞ்சை உள்ளிட்ட மாவட்ட விவசாயிகளுக்கும், வணிகர்களுக்கும் ஒரு நல்ல செய்தியாக இருக்கும் என்பது நிச்சயம். அரசின் இந்த அறிவிப்பிற்கு அனைத்து விவசாயிகள், வணிகர்கள் சார்பாக நன்றியை தெரிவிக்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.