சென்னை: பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் ஆகஸ்ட் 14-ம் தேதி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம், செங்கல்பட்டு ரயில்கள் பல்லாவரம் வரை மட்டுமே இயக்கப்படும். காலை 10.30 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரையும் இரவு 10 மணி முதல் நள்ளிரவு 11.59 மணி வரையும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.