சென்னை: பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரயில்கள் நாளை பகுதி நேரமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதன்படி, சென்னை சென்டிரலில் இருந்து நாளை மற்றும் வருகிற 24ம் தேதி காலை 9.10, 11 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரயில், பகுதிநேரமாக திருவள்ளூர்-அரக்கோணம் இடையே ரத்து செய்யப்படுகிறது. அதே தேதிகளில் காலை 11.15, 12 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை சென்டரல் வரும் மின்சார ரயில் அரக்கோணம்-திருவள்ளூர் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.
சென்னை சென்டரலில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருவள்ளூர்-திருத்தணி இடையே ரத்து செய்யப்படுகிறது. திருத்தணியில் இருந்து மதியம் 12.35 மணிக்கு புறப்படும் சென்னை சென்டரல் வரும் மின்சார ரயில் பகுதிநேரமாக திருத்தணி-திருவள்ளூர் இடையே ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டரலில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு ஆந்திர மாநிலம் திருப்பதி செல்லும் மின்சார ரயில், சென்னை சென்டரல்-திருத்தணி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, வேலூர் கண்டோன்மென்ட் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் மின்சார ரயில், சித்தேரி-அரக்கோணம் இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.