மைதா – 200 கிராம்,
அரிசி மாவு – 300 கிராம்,
மிளகாய் வற்றல் 3,
பெருங்காய தூள் ½ டீஸ்பூன்,
வெண்ணெய் – எலுமிச்சை அளவு,
உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
மைதா, அரிசிமாவு இரண்டையும் ஒரு தாம்பாளத்தில் போட்டுக் கொள்ளவும். மிளகாய் வற்றல், ெபருங்காய தூள், உப்பு இந்த மூன்றையும் நைசாக அரைத்து மாவில் போடவும். வெண்ணெயையும் போட்டு நன்றாகப் பிசைந்து சுண்டைக்காய் அளவில் சீடைகள் செய்து தாம்பாளத்தில் போட்டு, எண்ணெய் காய்ந்ததும் சீடை உருண்டைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.