மகிந்திரா நிறுவனம் ஏஎக்ஸ்5 செலக்ட் என்ற புதிய காரை அறிமுகம் செய்துள்ளது. ஏஎக்ஸ்5 7 சீட்டர் வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின் வேரியண்ட்களில் கிடைக்கும். துவக்க ஷோரூம் விலையாக பெட்ரோல் மேனுவல் டிரான்ஸ்மிஷன் சுமார் ரூ.16.89 லட்சம், ஆட்டோமேட்டிக் வேரியண்ட் ரூ.18.49 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் டீசல் மேனுவல் சுமார் ரூ.17.49 லட்சம் எனவும், டீசல் ஆட்டோமேட்டிக் சுமார் ரூ.19.09 லட்சம் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பனோரமிக் சன்ரூப், டூயல் 10.25 இன்போடெயின்மென்ட் டிஸ்பிளே உட்பட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
மகிந்திரா எக்ஸ்யுவி 700 ஏஎக்ஸ்5 செலக்ட்
136