மகிந்திரா நிறுவனம், எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ என்ற எஸ்யுவியை கடந்த மாதம் அறிமுகம் செய்திருந்தது. இந்தக் கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின், 1.2 லிட்டர் ஜிடிஐ டர்போ பெட்ரோல் இன்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகிய தேர்வுகளில் கிடைக்கிறது. எம்எக்ஸ்1, எம்எக்ஸ்2 புரோ, எம்எக்ஸ்2 புரோ ஏடி, எம்எக்ஸ்3 , ஏஎக்ஸ்5, ஏஎக்ஸ்5எல் எம்டி, ஏஎக்ஸ்5எல் ஏடி, ஏஎக்ஸ்7 மற்றும் ஏஎக்ஸ்7 எல் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கிறது. துவக்க ஷோரூம் விலை சுமார் ரூ.7.49 லட்சம். டாப் வேரியண்ட் ஏஎக்ஸ்7எல் சுமார் ரூ.13.99 லட்சம். இந்த காருக்கு வரவேற்பு அதிகம் உள்ளதாகவும், இதனால் முன்பதிவு செய்வோருக்கு காத்திருப்பு காலம் நகரத்துக்கு ஏற்ப 3 மாதம் முதல் 6 மாதம் வரை உள்ளதாக டீலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மகிந்திரா எக்ஸ்யுவி 3எக்ஸ்ஓ
150
previous post