மகிந்திரா அண்ட் மகிந்திரா நிறுவனம், புதிய மேம்படுத்தப்பட்ட பொலிரியோ நியோ எஸ்யுவியை அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காரில் 6 ஏர்பேக்குகள் இடம் பெற்றிருக்கும். இதுபோல், புதிய பாடி பேனல்கள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது. தற்போதைய பொலிரியோ நியோ காருடன் ஒப்பிடுகையில் தோற்றத்தில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய பம்பர்கள், எல்இடி பனி விளக்குகள் உள்ளன. பின்புறம் லேண்ட் ரோவர் டிபண்டர் காரை போன்ற தோற்றத்தை கொண்டுள்ளது.
தற்போதைய பொலிரியோ நியோவில் 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 100 எச்பி பவரையும், 260 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர் பாக்ஸ் கொண்டது. புதிய நியோவில் இதே இன்ஜின்தான் இடம் பெறுமா அல்லது தொழில்நுட்ப மேம்பாடுகள் எதுவும் செய்யப்பட்டிருக்குமா என்பது குறித்த தகவல் இல்லை.